பிரான்ஸில் 136 இடங்களில் நடந்த போராட்டம்: ஆர்பாட்டக்காரர்கள் 1000 பேர் கைது
135 protesters arrested in france: பிரான்ஸில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் போராட்டத்தில் 135 பேர் கைது
பிரான்சில் சனிக்கிழமை நாடு முழுவதும் நடந்த பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் கிட்டத்தட்ட 35,000 பேர் வரை கலந்து கொண்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை 264 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் கலந்து கொண்ட நிலையில், இந்த வாரம் 136 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 35,000 பேர் வரை கலந்து கொண்டு இருப்பதாக BFMTV ஊடகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி போராட்டத்தில் கலந்து கொண்ட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையை முன்னிட்டு போராட்டங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
மேலும் LVMH, Louis Vuitton, Dior மற்றும் Bulgari ஆகிய பிராண்டட் விற்பனையகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தியது.
போராட்டம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.