வெளிநாடொன்றில் மாயமான 14 சிறுவர்கள்... தெரியவந்த அதிரவைக்கும் பின்னணி
ஸ்பெயின் நாட்டில் இளைஞர் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 14 சிறுவர்கள் மாயமானதைத் தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தல் தொடர்பில் அதிரவைக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாயமான 14 சிறுவர்கள்...
மே மாதம், வடமேற்கு ஆப்பிரிக்க நாடான Mauritaniaவைச் சேர்ந்த ஒருவர், ஸ்பெயின் நாட்டிலுள்ள Lanzarote என்னும் தீவிலிருந்து, ஸ்பெயின் தலைநகரான Madridக்கு விமானம் ஏற முயலும்போது அவருடன் மூன்று சிறுவர்கள் இருப்பதைக் கவனித்த அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த சிறுவர்கள் ஸ்பெயினிலுள்ள இளைஞர் காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளில், ஸ்பெயினுக்குச் சொந்தமான Lanzarote மற்றும் Gran Canaria தீவுகளிலுள்ள இளைஞர் காப்பகங்களிலிருந்து, 14 சிறுவர்கள் மாயமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக, வட ஆப்பிரிக்க நாடான மொராக்காவை மையமாகக் கொண்ட ஒரு கும்பல், மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஐவரி கோஸ்டில் உள்ளவர்கள் உதவியுடன் ஸ்பெயினில் போலி ஆவணங்களுடன் சிறுவர்களை தற்காலிகமாக தங்கவைத்துள்ளது தெரியவந்தது.
அங்கிருந்து அந்த சிறுவர்கள் பிரான்சுக்கு கடத்திச் செல்லப்படுகிறார்கள். நீண்ட விசாரணைக்குப் பின், நேற்று, Canary தீவுகளிலிருந்து சிறுவர்களான புலம்பெயர்வோரை பிரான்சுக்கு கடத்தும் கும்பலைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், மாயமான சிறுவர்கள் இதுவரை கிடைக்கவில்லை. பொலிசார் அவர்களை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸுடன், ஐரோப்பாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழையும் முக்கிய மூன்று நுழைவாயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும், ஸ்பெயினுக்குச் சொந்தமான Canary தீவுகள் வழியாக, சுமார் 47,000 புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |