சீனாவில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
14 dies in china highrise building fire incident: சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
வட சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான taiyuan-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் யிங்ஸே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரமாக போராடி, இரவு சுமார் 7 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு சுமார் 8.30 மணியளவில் மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
34 பேர் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
குடியிருப்பு மற்றும் வணிகப் பயன்பாடு கொண்ட ஒரு கலப்பு வளாகமாக இருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில், ஹொட்டல்கள், குழந்தைகளுக்கான கல்விப் பயிற்சி மையங்களும் இருந்துள்ளன.

கட்டிடத்தில் உள்ள ஒரு ஹொட்டலின் ஊழியர் ஒருவர், 5வது மாடியில் தீ விபத்து தொடங்கியதாகவும், 8வது மாடியில் சிலர் காயமடைந்ததாகவும் தாம் கருதுவதாகவும் Jimu ஊடகத்திடம் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.