கழிவறையில் தூக்கில் தொங்கிய 14 வயது மாணவி! மர்ம மரணம் என போராட்டம் நடத்திய உறவினர்கள்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை மாணவி தூக்கில் சடலமாக தொங்கியது மர்ம மரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடசாலை மாணவி மரணம்
கர்நாடக மாநிலம் சிக்மகளூரின் என்.ஆர்.புராவைச் சேர்ந்த பாடசாலை மாணவி அமுல்யா (14). இவர் உண்டு உறைவிட பாடசாலையில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உறைவிட பாடசாலை கழிவறையில் தூக்கில் தொங்கியபடி அமுல்யா சடலமாக இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூற, பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் அமுல்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்களுடன் மருத்துவமனை முன்பு திரண்டனர்.
போராட்டம் நடத்திய உறவினர்கள்
மாணவியின் உடலை வாங்கிய பின்னர் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, காவல் நிலையம் முன்பு அமுல்யாவின் உடலை வைத்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பொலிஸார் அவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அவர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அமுல்யாவின் உடலை எடுத்துக் கொண்டு அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Representational Photo : iStock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |