கொல்கத்தாவில் உள்ள ஹொட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
இந்திய மாநிலமான மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள ஹொட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 பேர் உயிரிழப்பு
நேற்று இரவு 8.15 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
இந்த தீ விபத்தில் ஏரளாமானோர் சிக்கியுள்ள நிலையில் பலரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தீ முழுவதும் அணைக்கப்பட்டதால் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன.
இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா கூறுகையில், "இந்த ஹொட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |