58 ஓட்டங்கள் மட்டுமே தேவை., வரலாற்று சாதனை படைக்கவிருக்கும் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, செப்டம்பர் 19-ஆம் திகதி தொடங்கவுள்ள வங்கதேசதிற்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் களம் காணவிருக்கிறார்.
35 வயதான கோலி சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இனி அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
விராட் கோலி அடிக்கடி சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார். எனினும், கோலி தொடர்ந்து சச்சினுடன் தன்னை ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று கூறி வந்தார்.
கோலி இதுவரை 80 சர்வதேச சதங்களை பதிவு செய்துள்ள நிலையில், டெண்டுல்கரின் 100 சதங்களை எட்டுவது இன்னும் சில காலம் ஆகலாம். ஆனால், இதே நேரத்தில் கோலி, வரவிருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.
கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ஓட்டங்களை எட்டுவதற்கு இன்னும் 58 ஓட்டங்கள் தேவை.
இந்த சாதனையை மிக வேகமாக அடைந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 623 இன்னிங்ஸ்களில் (226 டெஸ்ட் இன்னிங்ஸ், 396 ஒருநாள் இன்னிங்ஸ், 1 T20I இன்னிங்ஸ்) 27,000 ஓட்டங்களை எட்டினார்.
இதுவரை கோலி 591 இன்னிங்ஸ்களில் 26,942 ஓட்டங்கள் அடித்துள்ளார். அடுத்த 8 இன்னிங்ஸ்களில் 58 ஓட்டங்கள் எடுக்க வாய்ப்புள்ளது. இது நிகழ்ந்தால், 147 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 600 இன்னிங்ஸ்களுக்கு குறைவாக 27,000 ஓட்டங்களை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுவிடுவார்.
இத்தகைய சாதனையை இதுவரை சச்சின் டெண்டுல்கர் தவிர, அவுஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையின் குமார சங்கக்காரா ஆகியோர் மட்டும் எட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
147 Years, Virat Kohli 58 Runs Away From hhistoric record, Virat Kohli record, sachin Tendulkar