சுவிட்சர்லாந்தில் ஒரு கிணற்றைக் காணோம் சம்பவம்: தலையை சொறிந்துகொள்ளும் அதிகாரிகள்
சினிமா ஒன்றில், ஒருவர் தன் கிணற்றைக் காணவில்லை என அதிகாரிகளிடம் புகாரளிப்பார்... அதிகாரிகள் மண்டையை சொறிந்துகொள்வார்கள்.
அதேபோல் ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது! சுவிட்சர்லாந்திலுள்ள Bernese என்ற கிராமத்தில், மாயமான 14 மில்லியன் லிற்றர்கள் தண்ணீர் என்ன ஆனது என உண்மையாகவே தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
Lauperswil என்ற முனிசிபாலிட்டிக்கு 35 மில்லியன் லிற்றர்கள் தண்ணீரை அனுப்பியுள்ளார்கள் அலுவலர்கள். ஆனால், 21 மில்லியன் லிற்றர் தண்ணீர்தான் அங்கு சென்றடைந்துள்ளது.
மீதி 14 மில்லியன் லிற்றர் தண்ணீரைக் காணவில்லை. இந்த அளவுக்கு எக்கச்சக்கமான தண்ணீர் காணாமல் போயிருப்பதால், தண்ணீர் குழாய் எங்காவது லீக்காகிறதா அல்லது திருடர்கள் யாராவது தண்ணீரைத் திருடிவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மர்மம் நீடிக்கிறது, அதிகாரிகள் மாயமான தண்ணீர் எங்கே போனது என்பதைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.