பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு தடை விதித்த 15 நாடுகள்! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இங்கிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு 15 நாடுகள் தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 13-ஆம் திகதி நிலவரப்படி, 1534-பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் இந்த வைரஸால் உயிரிழந்திருப்பதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகள் பிரித்தானியா மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Australia
இங்கு, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நாட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதாவது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள், அவுஸ்திரேலியா குடிமக்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆகியோர் அனுமதிக்கப்படுவர்.
இதைத தவிர மற்ற வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவதில்லை.
Benin
மேற்கு ஆப்பிரிக்க நாடான Benin, தன்னுடைய எல்லையில் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிரித்தானியா போன்ற ஒமைக்ரான் பரவல் அதிகம் கொண்ட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதற்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Bhutan
இங்கு வெளிநாட்டினர் அனைவரும் உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போது மீண்டும் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவர் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
China
பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி விமானங்களையும், சீனா தடை செய்துள்ளது.
Falkland Islands
இந்த தீவுக்கு வருகை தரும் வெளிநாட்டினர் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Indonesia
இந்தோனேஷியாவில் தற்போது பிரித்தானியா குடிமக்களுக்கு சுற்றுலா விசாக்கள் கிடைக்கவில்லை.
Israel
நாட்டில் உள்ள பிரத்யேக விதிவிலக்கு குழுவிடம் இருந்து, சிறப்பு நுழைவு அனுமதி பெற்றால் மட்டுமே இஸ்ரேல் அல்லாத குடிமக்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
Japan
கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் திகதி முதல் பிரித்தானியா சுற்றுலாப்பயணிகள் உட்பட, அனைத்து வெளிநாட்டினரும், நுழைய அனுமதிக்கப்படவில்லை.
Laos
இந்த நாட்டு அரசாங்கம், அனைத்து சர்வதேச நுழைவு விசா சேவையை நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாட்டில் இருந்து திரும்பும் எவருக்கும் விசா வழங்கப்படவில்லை.
Malaysia
பிரித்தானியா குடிமக்கள், உள்ளே நுழைய அனுமதியில்லை. அதே சமயம் இங்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து கொண்ட பிரித்தானியர்கள், குடியுரிமை அனுமதிச் சீட்டு, தொழில்முறை வருகை அனுமதிச் சீட்டு, மலேசிய குடிமக்களை திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி ஆகியோர் மட்டுமே, பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
Myanmar
மியான்மர் தற்போதைக்கு சுற்றுலா விசா விண்ணப்பங்களை இடை நிறுத்தியுள்ளது.
New Zealand
நியூசிலாந்தை பொறுத்தவரை பிரித்தானியா உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் தடை விதித்துள்ளது.
Suriname
தென் அமெரிக்க நாடான Suriname வெளிநாட்டினர் அனைவரின் வருகைக்கு தடை விதித்துள்ளது.
Taiwan
தைவான் அரசு தற்போதைக்கு பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டினர் உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, Vietnam அரசும், வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.