15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர்
15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும் வாழ்வதாக பெண் ஒருவர் அறிவித்துள்ளார்.
கணவரின் பதில் என்ன?
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ராம்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த சுக்ராம் என்பவருக்கும், மேகா என்பவருக்கும் ஓராண்டிற்கு முன்பாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
பின்பு கணவரின் வீட்டில் வாழ்ந்து வந்த மேகா அங்குள்ள ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வீட்டை விட்டு ஓடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பின்பு, பெரியவர்கள் மேகாவை அழைத்து வரும்படி கூறியதால் மனைவியை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார் கணவர் சுக்ராம்
ஆனால், தொடர்ந்து மேகா தனது காதலனுடன் செல்வதை வழக்கமாக்கினார். இதனால் அவரது கணவர் ஒவ்வொரு முறையும் அவரை வீட்டிற்கு அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதேபோல கடந்த ஒரு ஆண்டில் மேகா தனது காதலனுடன் 9 முறை சென்றார். அதன்படி, கடந்த 8 நாட்களுக்கு முன்பாக காதலுடன் மனைவி ஓடிய நிலையில், காவல் நிலையத்தை சுக்ராம் அணுகினார்.
இதையடுத்து, பொலிஸார் அவரை கண்டுபிடித்து ஒப்படைத்த போதும் மறுநாளே காதலன் வீட்டிற்க்கு சென்று விட்டார் மேகா.
பின்னர், மேகாவை தன்னுடன் வரும்படி சுக்ராம் கூறியபோது அவர் வர மறுத்துவிட்டார். இதற்கு ஒரு தீர்வை கொண்டு வர வேண்டும் என்று சுக்ராம் கிராம பஞ்சாயத்தை கூட்டினார்.
ஆனால், அப்போதும் காதலனுடன் இருந்து வரமாட்டேன் என்று மேகா கூறினார். பின்னர் 15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும் வாழ்வதாக அவர் கூறினார். இதற்கு தனது மனைவி வேண்டாம், காதலனுடனே வாழட்டும் கூறி விட்டு சென்றார் சுக்ராம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |