கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்டுவந்த 15 இந்திய வம்சாவளியினர்: விவரம் செய்திக்குள்
கனடாவில் 9.2 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய பொருட்களை திருடிய கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 15 பேரும் இந்திய வம்சாவளியினர் ஆவர்.
தொடர்ந்து திருட்டுப்போன வாகனங்கள்
கனடாவின் பீல் முனிசிபாலிட்டி மற்றும் கிரேட்டர் ரொரன்றோ பகுதிகளில் ட்ராக்டர் ட்ரெய்லர் வகை வாகனங்கள் திருட்டுபோவதாக பொலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
ndtv
அதைத் தொடர்ந்து, பொலிசார் தனிப்படை அமைத்து அந்த திருடர்களைத் தேடிவந்தனர்.
15 இந்திய வம்சாவளியினர் கைது
தற்போது, இந்த திருட்டுகள் தொடர்பாக 15 இந்திய வம்சாவளியினரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் கிரேட்டர் ரொரன்றோவின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள்.
இவர்கள், ட்ராக்டர் ட்ரெய்லர்கள் நிற்கும் இடத்துக்குச் சென்று, வேலியில் ஆள் நுழையும் அளவுக்கு துவாரமிட்டு, உள்ளே நுழைந்து, ட்ராக்டரை எடுத்துக்கொண்டு வேலியை உடைத்துக்கொண்டு வெளியேறிவிடுவார்கள்.
சாலையோரம் நிற்கும் ட்ராக்டர் ட்ரெய்லர்களையும் இவர்கள் விட்டதில்லையாம். 6.9 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய பொருட்கள் மற்றும் 2.2 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய ட்ராக்டர் ட்ரெய்லர்களை பொலிசார் இந்த கும்பலிடமிருந்து கைப்பற்றியுள்ளார்கள்.
22 முதல் 45 வயதுடைய அந்த 15 பேர் மீதும் பொலிசார் 73 குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |