14 பேரை சுட்டுக்கொன்ற மாணவர்! பயங்கர சம்பவத்தால் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி
செக் குடியரசில் மாணவர் ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
செக் குடியரசு நாட்டில் உள்ள Prague பல்கலைக்கழகத்தில், 24 வயது மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேரை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Getty Images
அத்துடன் 24 பேர் காயமடைந்த நிலையில், தாக்குதல் நடத்திய மாணவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்நிறுத்தத்திற்கு அழைப்பு, ஆனால் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கு மறுப்பு! கனேடிய பிரதமரின் முரணான நிலைப்பாடு
ஆனால் அவரது பெயர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Reuters
ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி பதிவு
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'Pragueயில் இருந்து வரும் சோகமான செய்தியால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த வன்முறைச் செயலால் தங்கள் அப்பாவி குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தினர்களுடன் எங்கள் எண்ணங்கள் இருக்கும்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் Czech நண்பர்களுக்கு: கனடா உங்களுடன் துக்கம் அனுசரிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
Photo: David Kawai/Bloomberg Via Getty
I’m deeply shocked by the tragic news coming out of Prague. Our thoughts are with the families of the innocent victims lost to this act of violence, and we’re hoping for a swift recovery for those injured. To our Czech friends: Canada mourns with you.
— Justin Trudeau (@JustinTrudeau) December 21, 2023
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |