உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு
ஐ.சி.சி. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கு எப்படி உலக் கோப்பை தொடர் இருக்கிறதோ, டி20-க்கு எப்படி உலகக் கோப்பை போட்டிகள் இருக்கிறதோ, அதே போன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஜுலை மாதம் 2019-ஆம் ஆண்டு இந்த போட்டி துவங்கிய நிலையில், அதன் இறுதிப் போட்டிக்கு இந்தியா-நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி வரும் 18-ஆம் திகதி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம் வருமாறு,
கேன் வில்லியம்சன் (தலைவர்), டாம் பிள்டெல், டிரண்ட் பவுல்ட், டிவோன் கான்வே, கோலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுதி, ராஸ் டைலர், நீல் வேகனர், பிஜே வாட்லிங், வில் யங்.