சுவிட்சர்லாந்தில் இந்த 15 துறைகளுக்கும் அதிக அளவில் பணியாளர்கள் தேவை: ஒரு பயனுள்ள தகவல்
சுவிட்சர்லாந்தில் சில துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம்.
2023ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி 15 துறைகளுக்கு அதிக அளவில் பணியாளர்கள் தேவை என தெரியவந்துள்ளது.
2024இலும், அதாவது, இந்த ஆண்டிலும் தகுதியுடையோர், தங்கள் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு பயனுள்ள தகவல்
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக அமைப்பு நாடுகளைச் சேராதவர்கள், சுவிட்சர்லாந்தில் பணி செய்யவேண்டுமானால் பணி விசா பெறவேண்டும்.
முன்கூட்டியே சுவிஸ் நிறுவனங்களிலிருந்து பணி ஆஃபர் பெறுவதுடன், அந்த குறிப்பிட்ட பணிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக அமைப்பு நாடுகளைச் சேராதவர்கள், அதாவது, மூன்றாவது நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை பணி வழங்குபவர் மூலம் உறுதி செய்வதும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மூன்றாம் நாட்டவர்கள், பணி விசா பெறுவது எளிதாக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் பணி செய்வதற்கான விசா பெறும் விதிகளை கடந்த ஆண்டு எளிதாக்க முடிவு செய்துள்ளது.
2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அதிக அளவில் காலியாக இருந்த பணியிடங்கள் என்னென்ன என்பதை இந்த பட்டியல் மூலம் அறிந்துகொள்ளலாம்.
Care Specialist / Nurse (6,395)
Electrician (6,337)
Sales advisor (4,056)
Carpenter (3,337)
Project manager (3.256)
Software developer (3.187)
Polymechanic (3.128)
Healthcare specialist (2.625)
Service technician (2.606)
Commercial clerk (2.559)
Sanitary installer (2,541)
Logistics Specialist (2,521)
Automation specialist (2,459)
Retail trade specialist (2,443)
Cooks (2,407)
தகுதியுடையோர், வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |