553 ஓட்டங்கள் குவித்த 15 வயது சிறுவன்! இலங்கை கிரிக்கெட் வாரியம் கொடுத்த பரிசு
பள்ளி கிரிக்கெட்டில் 553 குவித்த மாணவனுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் பரிசு
அசத்திய சாதனை படைத்த மாணவன் தனிது செல்லப்பெருமாவுக்கும் குவியும் வாழ்த்துக்கள்
பள்ளி கிரிக்கெட் தொடரில் 553 ஓட்டங்கள் குவித்த மாணவனுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி கௌரவித்தது.
பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்திய 15 வயதுக்குட்பட்ட பள்ளி கிரிக்கெட் போட்டி தொடரில், தனிது செல்லப்பெருமா என்ற மாணவன் 553 ஓட்டங்கள் குவித்தார்.
அவரை கௌரவிக்கும் விதமாக, தனிதின் பாடசாலை அணித்தலைவர் பமுல லொகுலியன மற்றும் பாடசாலை பயிற்றுவிப்பாளர் அதுல ரோஹன ஆகியோரின் முன்னிலையில், கிரிக்கெட் உபகரணங்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் வழங்கியது.
மாணவனுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் 3 பேட், 3 பேடுகள், 3 பேட்டிங் கையுறைகள், விக்கெட் கீப்பிங் கையுறைகள், 2 ஹெல்மெட்கள் உள்ளிட்டவை அடங்கும்.
மிரட்டலாக துடுப்பாட்டம் செய்த மாணவன் தனிது செல்லப்பெருமாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
முன்னதாக, இந்த ஆண்டின் நடுப்பகுதியில் மாணவனின் பள்ளிக்கு இதே போன்ற கிரிக்கெட் உபகாரணங்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.