150 கிலோ எடையிருந்த பெண்.., எந்த எளிய முறையால் 86 கிலோவை குறைத்தார் தெரியுமா?
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பல முயற்சியை செய்து வருவதுண்டு.
உடற்பருமன் காரணமாக பலர் மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால் அதை எப்படி குறைக்க வேண்டும் என்று தெரியாமல் பலரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் சமூக ஊடகத்தில் 86 கிலோ அளவிற்கு உடல் எடையை குறைத்த அனுபவம் குறித்து ஒருவர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேற்கொண்ட சில எளிய குறிப்புகளும் உள்ளன.
கலோரிகள்
தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருந்தும் உடல் எடை குறையவில்லை என்றால் நீங்கள் கலோரிகளை குறைவாக உட்கொள்ளவில்லை என அர்த்தம். உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் குறைவான கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஓய்வு முக்கியம்
பொதுவாகவே ஒருவருக்கு நிம்மதியை தருவது தூக்கம். தினமும் 7-8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்தாலும் உங்கள் உடம்பிற்கு ஓய்வை பெற வைக்க கட்டாயம் தூங்க வேண்டும். தூங்காமல் இருந்தால் உடற்சோர்வு ஏற்பட்டு, அது உடல் எடையை குறைக்க வழிவகுக்கும்.
ஊட்டச்சத்தில் கவனம் தேவை
கடைகளில் இருந்து வாங்கப்படும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் உங்களுக்கு ஊட்டசத்தை வழங்காது. புரோட்டீன் சப்ளிமண்ட்ஸ் மற்றும் அசைவ உணவுகளில் கிடைக்கும் புரோட்டீன் உங்களது உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவும். இது எடையை குறைக்கவும் உதவும்.
தொடர்ந்து இதை செய்யவும்
ஒருவருக்கு ஊக்கம் இருந்தால மட்டுமே அவர் தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்வார் என்று கூறுவார்கள். ஆனால் ஒழுக்கம் இருந்தால் தான் ஒரு வேலையை தொடர்ந்து செய்ய முடியும். உடற்பயிற்சி செய்வது என்பது உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். எனவே தினமும் பலன் பெற உழைத்து முன்னேறுங்கள். அதாவது ஒழுக்கத்தின் அடிப்படையில் உடற்பயிற்சியை தவறாது செய்யவும்.
பொறுமை அவசியம்
உடல் எடையை குறைப்பது என்பது எளிதானது அல்ல. உடல் எடையை எப்படியானலும் அதிகரிக்க செய்யலாம். ஆனால் குறைப்பது என்பது கடினம். எனவே சில நாட்களுக்கு பொறுமையாக இருந்து உடல் எடையை குறைக்கவும். அதுவே உங்களுக்கு நன்மையை அளிக்கும்.
150 கிலோவில் இருந்து 64 கிலோ வரை...
இந்த 5 விடயங்களை செய்து தான், சமூக ஊடக பிரபலமான பிரஞ்சல் பாண்டேஉடல் எடை குறைத்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் 150 கிலோ உடல் எடையுடன் இருந்த பிரஞ்சல் பாண்டே இவற்றை பின்பற்றியே 2024ஆம் ஆண்டில் 86 கிலோ குறைத்து, 64-68 கிலோவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |