மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
150 மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு
பீகார் மாநிலத்திலுள்ள Baluaha என்னும் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தியும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 115 பேருக்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில், சுமார் 50 மாணவர்கள் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், அந்தப் பள்ளியில் பருப்பு வேகவைத்த பாத்திரத்தில் பாம்பு ஒன்று கிடப்பது தெரியவந்ததாக சில மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
பாம்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அந்தப் பள்ளியில் படிக்கும் சுமார் 200 மாணவ மாணவியர் மதிய உணவை சாப்பிட்டு முடித்துவிட, அவர்களில் பலருக்கு வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |