150வது ஆண்டைக் கொண்டாடும் டெஸ்ட்! மோதும் இரு பலம்வாய்ந்த அணிகள்
சர்வதேச அளவில் 150வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி 2027யில் நடைபெற உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி
1877ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்த இரு அணிகளும் முதல்முறையாக அப்போட்டியில் மோதின. அதனைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டில் நூறாவது வருடத்தைக் குறிக்கும் வகையில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
அதில் அவுஸ்திரேலியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது.
150வது ஆண்டில் மோதல்
இந்த நிலையில் இவ்விரு அணிகளும் 150வது ஆண்டில், அதாவது 2027யில் மீண்டும் மோத உள்ளன.
ஒவ்வொரு டிசம்பரில் 2025/26 சீசனில் தொடங்கி பகல்-இரவு மற்றும் பகல் டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட "கிறிஸ்துமஸ் டெஸ்ட்" நடைபெற உள்ளது.
இதற்கிடையில், பெர்த் மைதானம் 2026/27 சீசன் வரை கோடையின் முதல் ஆண்களுக்கான டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே முதன்முதலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதில் இருந்து, இந்த நினைவுப் போட்டி 150வது ஆண்டை குறிக்கும்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |