லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரிகளில் 150 பேர் குற்றவாளிகள்
காவல்துறையினரால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, லண்டன் பெருநகர காவல்துறையில் பணியாற்றும் 150 அதிகாரிகள் குற்றவாளிகள் எனக் கூறப்படுகிறது.
இதில் தாக்குதலில் ஈடுபடுதல், சேதம் விளைவித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் திருட்டு / மோசடி ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடங்குவர் எனதும் தெரிய வந்துள்ளது.
ஆனால் அந்த 150 பொலிஸ் அதிகாரிகளும் பணிக்கு சேர்வதற்கு முன்னரே குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக ஸ்காட்லாந்து யார்ட் வலியுறுத்தியுள்ளது.
மேலும் சில அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
லண்டன் பெருநகர காவல்துறையில் தற்போது 32,000 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையை பொருத்தமட்டில், கட்டாய நிராகரிப்புக்கு வழிவகுக்கும் சில குற்றங்களும் உள்ளன.
நேர்மையற்ற தன்மை, ஊழல், கடுமையான வன்முறை அல்லது காயம் ஏற்படுத்துதல், போதைப்பொருட்களுடன் தீவிர ஈடுபாடு அல்லது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்தல்,
கணிசமான நிதி ஆதாயம் அல்லது யாருக்கும் கடுமையான இழப்பு ஆகியவை கண்டறியப்பட்டால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக ஸ்காட்லாந்து யார்ட் சுட்டிக்காட்டியுள்ளது.