மணிக்கு 155 கிமீ வேகத்தில் செல்லும் Electric Bike.., விலை எவ்வளவு தெரியுமா?
அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)-கை அல்ட்ராவைலட் (Ultraviolette) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
F77 Super Street Electric Bike
அல்ட்ராவைலட் (Ultraviolette) நிறுவனமானது, அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் பைக்காக (Electric Bike) F77 Super Street-யை அறிமுகம் செய்துள்ளது.
இந்த எலக்ட்ரிக் பைக்கானது மணிக்கு 155 கிமீ வேகத்தில் செல்லும். அதாவது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 2.8 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.
இந்த அதிவேக எலக்ட்ரிக் பைக்கான F77 Super Street-ன் அறிமுக விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.
இது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் டெலிவரி பணிகள் தொடங்க இன்னும் சில காலமாகும்.
இதில் 10.3 kWh திறன் கொண்ட Battery pack பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 323 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |