புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீ: 157 பேரை மீட்ட பிரித்தானியாவும் பிரான்சும்
150க்கு மேற்பட்ட புலம்பெயர்வோர் பயணித்த படகில் தீப்பற்றிய நிலையில், பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து அவர்களை மீட்டுள்ளன.
இன்று காலை பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது தீப்பற்றியுள்ளது.
157 பேரை மீட்ட பிரித்தானியாவும் பிரான்சும்
புலம்பெயர்வோர் படகில் தீப்பற்றிய தகவலறிந்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிலிருந்து படகுகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

படகின் எஞ்சினில் தீப்பற்றியதால் அதிலிருந்தவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, பிரான்சிலிருந்து சென்ற இரண்டு படகுகள் அவர்களில் 102 பேரை மீட்டுள்ளன.
பிரித்தானியாவிலிருந்து சென்ற படகு 54 புலம்பெயர்வோரை மீட்டுள்ளது.
அனைவரும், பிரான்சிலுள்ள Boulogne-sur-Mer என்னுமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என பிரித்தானிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |