லண்டனில் மீன் மற்றும் சிப்ஸ் கடைக்கு செல்லும் வழியில் குத்தி கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்! வெளியான புகைப்படம்
லண்டனின் மீன் மற்றும் சிப்ஸ் கடைக்கு செல்லும் வழியில் குத்தி கொல்லப்பட்ட 15 வயது சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Romario Opia என்றழைக்கப்படும் 15 வயது சிறுவன், நீண்டகாலமாக இளைஞர் ஒருவருடன் இருந்த பிரச்சனை காரணமாக குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று வடக்கு லண்டனின் Islington-ல் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு அங்கிருக்கும் மீன் மற்றும் சிப்ஸ் கடைக்கு செல்லும் வழியில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
இந்த சம்பவம் ஒரு வாக்குவாத்தின் காரணமாக நடந்துள்ளது. இது ஒரு நீண்ட நாள் பகை என்று கூறப்படுகிறது.
மார்பில் குத்தப்பட்டு சிறுவசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, 16 வயது மதிக்கத்தக்க சிறுவனை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விடுவித்துள்ளனர்.
Romario Opia ஹோலோவேயில் உள்ள பெக்கான் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்தவர். கடந்த ஒரு வாரத்தில் பிரித்தானியாவில் குத்திக் கொல்லப்பட்ட மூன்றாவது இளைஞன் இவர் ஆவார்.
கடந்த வாரம் ஹரிங்கியில் குத்தப்பட்டதில் அனஸ் மெசென்னர் என்ற 17 வயது இளைஞனும், கியோன் லிங்கன் என்ற 15 இளைஞனும் வியாழக்கிழமை பர்மிங்காமில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Romario Opia குத்தி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, பொலிசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.
எங்கள் சிறப்பு குற்றக் கட்டளையின் துப்பறியும் நபர்கள் விரிவான விசாரணைகளை மேற்கொள்வார்கள், இந்த சம்பவம் குறித்து ஏதாவது தெரிந்த எவரும் முன் வந்து அந்த தகவலை கூறும் படி கேட்டுக்கொள்கிறோம்.
விசாரணையை வழிநடத்தும் துப்பறியும் தலைமை ஆய்வாளர் நீல் ஜான் மேலும் கூறுகையில், எனது அதிகாரிகளும் நானும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கண்டுபிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
யாராக இருந்தாலும், நீதிக்கு முன் நிறுத்தப்படுவர். சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என்று அங்கே இருக்கிறவர்கள் யாருக்கேனும் தெரிந்தால், அவர்கள் முன்வர வேண்டும், இந்த சம்பவத்தின் மொபைல் போன் காட்சிகள் இருந்தால், அதை பொலிசாருக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.