இவருக்கெல்லாம் 16.25 கோடியா? விசித்திரமா இருக்குயா: குமுறிய முன்னாள் இந்திய வீரர்
ஐபிஎல் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டது மிகவும் விசித்திரமாக இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடிக்கு வாங்கியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் பட்டியலில் யுவராஜ் சிங்கை (16 கோடி) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் மோரிஸ்.
இந்நிலையில், அதிரதாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஒருவருக்கு 16.25 கோடியா? என கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியதில்லை, எனவே எதன் அடிப்படையில் அவர் வருகிறார்? இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
அவர் இவ்வளவு பணத்திற்கு விலை போவார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை என கம்பீர் விமர்சித்துள்ளார்.
30 வயதான கிறிஸ் மோரிஸ், இதுவரை தென் ஆப்பரிக்க அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1 அரைசதத்துடன் மொத்தம் 173 ஓட்டங்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சில் மொத்தம் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
42 ஒரு நாள் போட்டிகளில் 1 அரைசதத்துடன் மொத்தம் 468 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
23 டி-20 போட்டிகளில் 1 அரைசதத்துடன் மொத்தம் 133 ஓட்டங்களுடன் பந்து வீச்சில் 34 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 70 போட்டிகளில் விளையாடி 2 அரைசதத்துடன் 551 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 80 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.