3 போட்டிகளில் விளையாடியதும் 16,00,000 பேர் பின்தொடர்கிறார்கள்! இதுதான் என் வளர்ச்சி - இளம்வீரர் நெகிழ்ச்சி
இந்திய அணிக்காக அறிமுகமான பின்னர், சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.6 மில்லியனாக மாறியுள்ளதாக சர்பராஸ் கான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சர்பராஸ் கான்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இந்திய அணியில் அறிமுகமானார்.
முதல் டெஸ்ட்டிலேயே அரைசதம் விளாசிய அவர், மூன்று போட்டிகளில் 200 ஓட்டங்கள் குவித்தார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும்.
இதன்மூலம் இந்திய ரசிகர்களின் கவனம் அவர் மீதும் விழுந்துள்ளதுடன், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடிய பின்னர் தனது வாழ்வில் அடைந்த வளர்ச்சி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சர்பராஸ் கான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மாற்றம்
அவர் கூறுகையில், 'இந்திய அணிக்காக அறிமுகமாகியபோது நிறைய Pressure இருந்தது. ஆனால், வேகமாக நான் ஓட்டங்களை சேர்த்ததால் அதிலிருந்து வெளிவர முடிந்தது.
இந்திய அணிக்காக அறிமுகமான பின்னர் என்ன மாற்றம் நடந்தது? என பலரும் கேட்கிறார்கள். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60,000 முதல் 70,000 வரை இருந்தது.
ஆனால், இந்திய அணிக்காக மூன்றே போட்டிகளில் ஆடிய பின், அது 1.6 மில்லியனாக மாறியுள்ளது' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், IPL போன்ற நீண்ட தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எனக்கான அழைப்பு எந்த அணியில் இருந்தும், எந்த நேரத்திலும் வரலாம். அதற்காக நான் தயாராக இருக்க வேண்டியது அவசியம். அதனால் என்னுடைய துடுப்பாட்டத்தில் கவனத்தை செலுத்த இருக்கிறேன் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |