பொதுவெளியில் 16 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற இளைஞன்! விசாரணையில் கூறிய காரணம்
இந்திய தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி வீதியில் 16 வயது சிறுமி, 20 இளைஞர் ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொடூர கொலை
சாஹில் என்ற அந்த இளைஞர், தன் காதலியான அந்த சிறுமியை பொதுவெளியில் 22 முறை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத இளைஞர், கல்லை தூக்கி போட்டு சிறுமியை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் அவரை தடுக்க முற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றது.
குறித்த சிறுமி பிறந்தநாள் விழா ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அதிர்ச்சி வீடியோ
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் AC பழுது பார்க்கும் சாஹில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இரவோடு இரவாக அவரிடம் நடத்திய விசாரணையின்போது, சிறுமி தன்னை புறக்கணித்ததால் கொன்றதாகவும், அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
PTI
முதற்கட்ட விசாரணைக்கு பின் பொலிஸார் தரப்பில், சாஹிலும் சிறுமியும் மூன்று ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் சிறுமி உறவை முறித்துக்கொள்ள முயன்றுள்ளார். சாஹில் அவரை விடவில்லை.
தன்னிடம் இருந்து விலகவில்லை என்றால் பொலிஸாரிடம் செல்வதாக சிறுமி கூறியதால், அவரை பயமுறுத்த பொம்மை துப்பாக்கியை சாஹில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கொலைக்கு முந்தைய நாள் இருவரும் சண்டையிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.