பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ரோபோட்டை பறிமுதல் செய்த காவல்துறை
robot seized by police which harassed16 year old girl in germany: ஜேர்மனியில் 16 வயது பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ரோபோட்டை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ரோபோட்
ஜேர்மனியின் ஹோஹென்சோலெர்ன்ரிங்கில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு வெளியே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது 1.6 மீட்டர் உயரமுள்ள தங்க மற்றும் சிவப்பு நிற ரோபோ ஒன்று அந்த சிறுமியின் பெண்ணின் பின்னால் இருந்து தட்டி தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை அந்த ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவரது 19 வயது நண்பரும் நேரலையில் வர்ணனை செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ரோபோவையும், அதை இயக்கியவர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அந்த ரோபோ வேண்டுமென்றே சிறுமிக்கு தொல்லை அளிக்கும் நோக்கில் இயக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனை தாக்குதல் என கருதியுள்ள காவல்துறை, துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.