முல்லைத் தீவை சேர்ந்த 16 வயது சிறுவன் மாயம்: காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார்
இலங்கையின் முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் கடந்த 29ஆம் திகதி சிறுவன் முதல் காணவில்லை என உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியை சொந்த முகவரியாக கொண்ட காணாமல் போன சிறுவன், கடந்த புயலுக்கு முன்னர் கருநாட்டுக்கேணி பகுதியில் தயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 28.11.2025 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான நாயாற்று பாலம் ஊடாக போக்குவரத்து பாலம் உடைவினால் இன்றுவரை தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறுவன், காணாமல் போனமை தொடர்பில் எந்த தகவலும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உறவினர்கள் இருந்துள்ளார்கள்.
அதனை தொடர்ந்து, இது தொடர்பில் உறவினர்களினால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்
எனவே, இந்த சிறுவனை காண்பவர்கள் உடனடியாக 768459796 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |