உலகக் கோப்பையில் இலங்கைக்கு 164 ஓட்டங்கள் இலக்கு!
இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்களை எடுத்து விளையாடி வருகிறது
இலங்கை அணியின் நிசங்கா, குணாதிலகா ஆகியோரது விக்கெட்டுகளை ஷிகோங்கோ கைப்பற்றியுள்ளார்
கீலாங்கில் தொடங்கிய உலகக்கோப்பை முதல் போட்டியில் நமீபியா அணி 164 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதி வருகின்றன. கீலாங்கில் தொடங்கிய இந்தப் போட்டியில் நமீபியா அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் லோப்டி ஈடன் 20 ஓட்டங்களும், பார்ட் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஜன் பிரைலின்க் 44 ஓட்டங்கள் விளாசினார். ஸ்மிட் இறுதியில் அதிரடியில் மிரட்டினார். அவர் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் நமீபியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் குவித்தது. மதுஷன் 2 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, சமீரா, ஹசரங்கா, கருணரத்னே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Twitter (@ICC)
AFP