அடுத்தடுத்து தோல்வி... சாதகமாக மாறிய அதிர்ஷ்டம்: இன்று ரூ 40,000 கோடி நிறுவன உரிமையாளர்
IIT பட்டதாரிகள் பொதுவாக பெருந்தொகை சம்பளம் பெற்றுக்கொண்டு ஏதேனும் ஒரு பெரிய நிறுவனத்தில் முதன்மை பொறுப்புகளில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள்.
மொத்தம் 17 முறை தோல்வி
ஆனால் சிலர் மட்டும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற, புதிதாக நிறுவனம் தொடங்கி, அதில் சாதிப்பார்கள். அப்படியான ஒரு IIT பட்டதாரி தான் அங்குஷ் சச்தேவா. கான்பூர் IIT பட்டதாரியான அங்குஷ் சச்தேவா முதன்முறையாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்.
ஆனால் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட அந்த நிறுவனத்தால் முடியவில்லை. அதை மூடிவிட்டு, இன்னொரு நிறுவனம் தொடங்குகிறார். அதுவும் மூடும் நிலை ஏற்பட, அப்படி மொத்தம் 17 முறை தோல்வியை எதிர்கொள்கிறார்.
18வது வாய்ப்பாக ஒரு நிறுவனம் தொடங்குகிறார். இறுதியில் அதிர்ஷ்டம் அவருக்கு சாதகமாக அமைகிறது. அந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 40,000 கோடி.
அங்குஷ் சச்தேவா 18வது தொடங்கிய நிறுவனம் ShareChat. சமூக ஊடகமான ShareChat தற்போது இந்தியாவில் உள்ள முதன்மையான 15 மொழிகளில் இயங்கி வருகிறது.
சந்தை மதிப்பானது ரூ 40,000 கோடி
உள்ளூர் மொழிகளில் இயங்கினால் மட்டுமே கிராமப்பகுதி மக்களும் பயனடைவார்கள் என்பதை புரிந்துகொண்டதன் பின்னர் தான் ShareChat பெரும் வெற்றியை ஈட்டத் தொடங்கியது.
2015ல் கான்பூர் IIT-ல் இருந்து பட்டம் பெற்ற அங்குஷ் சச்தேவா, சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி சாதிக்க வேண்டும் என்று களமிறங்குகிறார். ஆனால் 17 முறை அவர் வெற்றி வாய்ப்பை இழக்கிறார்.
இதன் பின்னர் தமது IIT நண்பர்கள் இருவருடன் இணைந்து ShareChat நிறுவனத்தை தொடங்குகிறார். 2022 ஜூன மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில், ShareChat நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ 40,000 கோடிகளுக்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |