ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி மனநலம் பாதிப்பு! 17 வயது மாணவனின் கை,கால்கள் கட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
தமிழக மாவட்டம் வேலூரில் 17 வயது மாணவன் ஆன்லைன் விளையாட்டினால் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன் தொடர்ச்சியாக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அதற்கு அவர் அடிமையாகியுள்ளார். இதனால் குறித்த மாணவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது கை, கால்கள் நிலையாக இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் தற்போது மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதில் மேலும் சோகமான விடயம் என்னவென்றால் அவரது கை, கால்கள் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பதின்பருவ மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வருவது தொடர்கதையாகியுள்ள நிலையில், 17 வயது மாணவர் மனநலம் பாதிக்கப்பட்டது பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |