பண்டிகையை கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! சிக்கிய 17 வயது சிறுவன் கூறிய அதிர்ச்சி காரணம்
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வேறொரு மாணவருடன் பேசியதால் மாணவியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹோலி பண்டிகையை கொண்டாட சென்ற மாணவி
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், உர்ஜா நகரில் உள்ள பாடசாலையில் பயின்று வந்தார். கடந்த புதன்கிழமை மாலை தனது தோழி ஒருவரின் வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார்.
[Representational Photo :
ஆனால் அவர் மறுநாள் வயல்வெளியில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது அருகில் ஒரு செல்போனும், இரும்புக்கம்பியும் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றினர்.
17 வயது சிறுவன் வாக்குமூலம்
பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் மாணவியுடன் பயின்று வந்த 17 வயது மாணவன் அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பிடிபட்ட மாணவன் அளித்த வாக்குமூலத்தில், மாணவியும் குறித்த சிறுவனும் நெருங்கி பழகியதாகவும், அவர் இன்ஸ்டாகிராமில் வேறொரு மாணவருடன் பேசி வந்தது தனது கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
அத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாட சென்ற அவரை வழி மறித்து, இரும்புக் கம்பியால் தாக்கி கொன்றதாக தெரிவித்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.