17 வயது சிறுவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமி! ஸ்மார்ட் போனில் இருந்த வீடியோக்கள்: அதிர்ச்சி தரும் சம்பவம்
தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பதை ஸ்மார்ட் போனில் வழக்கமாக கொண்டிருந்த 17 வயது சிறுவன், 11 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி திடீரென்று காணமல் போனார். இதனால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிய வந்த நிலையில், அங்குள்ள ஒதுக்கு புறமான காட்டுப்பகுதியில் காயங்களுடன் அந்த சிறுமி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், அந்த சிறுமியியுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்பட்ட 17 வயது ஐ.டி.ஐ மாணவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது சிறுவன், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதோடு, தனக்கும் சிறுமிக்கும் சம்பந்தமில்லை என்பது போல் கூறியுள்ளான். இதனால் பொலிசார் இது குறித்து வழக்கை தீவிரப்படுத்திய போது, அந்த சிறுமி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலும், அந்த சிறுவன் கையில் இருந்த செல்போனும் ஒன்று என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சிறுவனை தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த பொலிசார், கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுவன், சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். சிறுமி கொலை செய்ததன் காரணம் குறித்து பொலிசார் கேட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிறுவன் பயன்படுத்திய ஸ்மார்ட் போனை வாங்கி ஆய்வு செய்த போது அவன் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆபாச இணையதளங்களை தேடி தேடிச் சென்று, மணிக்கணக்கில் அவன் ஆபாச படங்களைப் பார்த்து வந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
மேலும், ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையானதால், அதில் வருவது போல விபரீத ஆசை அவனுக்கு தோன்றியுள்ளது. தனியாக வந்த சிறுமியை பார்த்ததும், பேசுவது போல நடித்து சிறுமியை காட்டுப்பாகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.
அதற்கு அந்த சிறுமி தனது தாயிடம் கூறுவதாக சொன்னதால் அந்த சிறுமியின் தலையில், அந்த சிறுவன் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளான். அந்த சிறுமி உயிருக்கு போராடிய நேரத்தில் மிருகமான அந்த சிறுவன் அந்த சிறுமியை உடலில் பல இடங்களில் கடித்து வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.
இதைக் கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைய, அவன் மீது கொலை வழக்கு மட்டும் பதிவு செய்து, அதன் பின் அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால், அவர்கள் அடிக்கடி என்ன செய்கிறார்கள்? அதில் என்ன கவனிக்கிறார்கள் என்பதையும், பெற்றோர் கவனிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், பெற்றோர் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.