நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்! பிஞ்சு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற சிறுவன்.. அதிரவைக்கும் சம்பவம்
அமெரிக்காவில் சிறுவன் ஒருவர் தன்னுடன் பிறந்த சகோதர்களை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Indiana பகுதியில் வசித்து வரும் Nickalas Kedrowitz(17) என்ற சிறுவனின் தந்தை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த சில ஆண்டில் பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதில் 2 வயதேயான பெண் குழந்தை 2017ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் மூச்சத்திணறி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் பின்னர் அடுத்த இரண்டே மாதத்தில் 11 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் மூச்சுத் திணறிய நிலையில் இறந்துள்ளது.
அடுத்தடுத்து 2 பிஞ்சு குழந்தைகள் மூச்சு திணறி இறந்துள்ளதால் இந்த மரணம் குறித்து பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சகோதரன் Nickalas Kedrowitz கொலை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து Nickalas கடந்த 2018ஆம் ஆண்டு தனது 2 சகோதரர்களை கொன்ற குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததையடுத்து Nickalas செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி Nickalas Kedrowitz-க்கு100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.