காதலருடன் சென்ற 17 வயது சிறுமி ஆணவக்கொலை! தப்பியோடிய தந்தை
இந்திய மாநிலம் கர்நாடகாவில் 17 வயது சிறுமி ஒருவர் காதலருடன் சென்றதால் அவரது தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்டார்.
17 வயது சிறுமி
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் கணேஷ் (40). இவரது 17 வயது மகள் பல்லவி பாடசாலையில் பயின்று வந்தார்.
தனது பாடசாலையில் பயிலும் மாணவர் ஒருவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் குறித்து கணேஷிற்கு தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மகள் பல்லவியை கணேஷ் கண்டித்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மகள் மாயமானதை அறிந்த கணேஷ், அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சிறுமி பல்லவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் பரப்பனஅக்ரஹாரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பல்லவி இருப்பது கணேஷிற்கு தெரிய வந்துள்ளது.
iStock
ஆணவக்கொலை
அதன் பின்னர் உடனடியாக மகள் இருக்கும் இடத்திற்கு சென்ற கணேஷ் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அத்துடன் சரமாரியாக மகளை தாக்கிய கணேஷ், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று ஆயுதம் ஒன்றை எடுத்து பல்லவியை தாக்கியதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சிறுமி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து கணேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பல்லவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கணேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.
Getty Images/iStockphoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |