ஓய்வறையில் மயங்கி விழுந்து 17 வயது டென்னிஸ் வீராங்கனை அதிர்ச்சி மரணம்!
பாகிஸ்தான் டென்னிஸ் வீராங்கனை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ITF ஜூனியர்ஸ் J3
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாத்தில் ITF ஜூனியர்ஸ் J3 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் ஜைனப் அலி நக்வி (Zainab Ali Naqvi) என்ற 17 வயது வீராங்கனையும் கலந்துகொண்டார்.
அவர் போட்டியின் பயிற்சி அமர்வின்போது, தனது அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை உதவியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து, அங்கு ஜைனப்பை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஜைனப் அலி நக்வி
பயிற்சியில் இருந்து திரும்பிய ஜைனப் குளிக்க சென்றாக கூறப்பட்ட நிலையில், இதய செயலிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
17 வயதே ஆன ஜைனப்பின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'ITF ஜூனியர்ஸ் போட்டியில் பங்கேற்க கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு வந்த இளம் டென்னிஸ் வீராங்கனை ஜைனப் அலி நக்வி 12 பிப்ரவரி 2024 அன்று காலமானார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |