பிரித்தானியாவில் 17 வயது சிறுமி மீது துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட தாக்குதல் என பொலிஸார் தகவல்
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் 17 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு
வியாழக்கிழமை காலை 12.55 மணியளவில் லிவர்பூலின் டாக்ஸ்டெத் (toxteth) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 வயது சிறுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் லாட்ஜ் லேனுக்கு அருகிலுள்ள லைம் குரோவ் பகுதிக்கு அருகே நடைபெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவமானது திட்டமிட்ட ஒன்று என்றும், சிறுமிக்கு தெரிந்த நபர்களில் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
இந்த சம்பவம் தொடர்பாக மெர்சிசைடு பொலிஸார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்பது குறித்து கண்டறிய முயற்சித்து வருவதாக காவல் ஆய்வாளர் ஜன்ஸ்லி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குற்றம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக முன்வந்து பொலிஸாரிடம் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |