கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடாவில் 172 இந்திய மாணவர்கள் மரணம்: கலங்கவைக்கும் புள்ளிவிவரம்
பல்வேறு காரணங்களுக்காக, வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பது இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான ஒரு விடயமாகிவிட்டது.
ஆனால், அப்படி கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் எத்தனை பேர் தாங்கள் கல்வி கற்கச் சென்றதன் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை!
வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகளில் மரணமடைந்த 633 இந்திய மாணவர்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை.
அதிகபட்சமாக, கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்களில் 172 பேர் மரணம் அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேள்வி எழுப்பிய கேரள நாடாளுமன்ற உறுப்பினர்
இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் (Kodikunnil Suresh) என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்கா சென்றவர்களில் 108 மாணவர்கள், பிரித்தானியா சென்றவர்களில் 58 மாணவர்கள், அவுஸ்திரேலியா சென்றவர்களில் 57 மாணவர்கள், ரஷ்யா சென்றவர்களில் 37 மாணவர்கள், ஜேர்மனி சென்றவர்களில் 24 மாணவர்கள் என மொத்தம் 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை.
இவர்களில், கனடாவில் மரணமடைந்த மாணவர்களில் 9 பேர் வன்முறைக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |