Job:இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் வேலை..செப் 17க்குள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில்(IAAT) 1773 நிர்வாக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: நிர்வாக உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: 1773
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவதற்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.அதாவது உயர்நிலை கல்வியாகவோ அல்லது கணினி சார்ந்த சான்றிதழ் படிப்பாகவோ பயின்றிருக்க வேண்டும். வயதுவரம்பு-18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுயான விண்ணப்பதாரர்கள் https://cag.gov.in என்ற இணையதளத்தின் மூலம் செப் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றி கூடுதல் விபரங்களை https://cag.gov.in அல்லது https://cag.gov.in/uploads/recruitment_ notice/recruitmentNotices-064e7307040d1e6-69903981.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |