ஃபுளோரிடா கடற்கரையில் இராணுவ வீரர்களின் அதிர்ச்சி செயல்: பயத்தில் அலறிய பொதுமக்கள் (வீடியோ)
அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரையில் இராணுவ வீரர்கள் விளையாட்டாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.
18 இராணுவ வீரர்கள்
ஃபுளோரிடாவின் நெரிசலான கடற்கரையில் பொதுமக்கள் நீச்சல், சூரியக்குளியல் என பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு படகில் இருந்த குறைந்தது 18 இராணுவ வீரர்கள் திடீரென துப்பாக்கியை எடுத்து விளையாட்டாக மேல்நோக்கி சுட்டுள்ளனர்.
இது அங்கிருந்த பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது. சிலர் உண்மையாக துப்பாக்கிச்சூடு நடப்பதாக நினைத்து பயத்தில் அலறியுள்ளனர்.
சிலர் உண்மையில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக நினைத்து ஒளிந்துகொள்ள முயற்சித்தனர். நபர் ஒருவர் உடனே இராணுவ வீரர்களிடம் சென்று ஏன் துப்பாக்கியால் சுட்டீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அவ்வவ்போது நடப்பதால் இராணுவ வீரர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கேள்விகளை எழுப்பியது.
அது உண்மையா
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், துப்பாக்கிச்சூடுகள் வெடிக்கும்போது ஒரு பெண் "அது உண்மையா?" என்று கூச்சலிட்டது கமெராவில் பதிவானது.
படகு கேப்டன் ஒருவர், "இது ஏற்றுக் கொள்ள முடியாதது, ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் பல உண்மையான துப்பாக்கிச் சூடுகள் நடக்கின்றன. நீங்கள் இதைப் பற்றி நகைச்சுவையாக கூற முடியாது" என்றார்.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு குறித்து குறைந்தது இரண்டு 911 அழைப்புகள் வந்ததாக, ஒகலூசா கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |