இந்தியாவில் கோர விபத்து! பேருந்துக்கு அடியில் சிக்கி 18 மரணம்! நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி
இந்தியாவில் பேருந்து மீது லொறி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்திலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
ஹரியானாவிலிருந்து பீகார் நோக்கி பயணித்த ஏசி பராபங்கியில் கோளாறாகி நின்றுள்ளது. கோளாறை சரிபார்க்க ஓட்டுநர் மெக்கானிக்கை தேடி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், சில பயணிகள் பேருந்திலேயே இருந்த நிலையில், சிலர் பேருந்திற்கு முன் சாலையில் படுத்து தூங்கியுள்ளனர். இதன்போது சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த பேருந்து பின்னால் லொறி பயங்கரமாக மோதியுள்ளது.
லொறி மோதி பேருந்து ஓடியதில் அதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சுமார் 18 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
30 உயிருக்கு ஆபத்தான நிலையில் பராபங்கி மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
65 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் 140 பயணிகள் பயணித்ததே, பேருந்து கோளாறாகி நின்றதற்கு காரணம் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்தவர்களிள் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Omm Shanti to the deaths and injuries of labourers caused due to road accident in #Barabanki #UttarPradesh. My condolences for the families who lost their loved ones. pic.twitter.com/5fenzbeI0D
— Pramod Kumar Sethi (@pramodsethi84) July 28, 2021