பிஸ்கட்டை வைத்து கமல் பேசிய GST விவகாரம்.., பேசுபொருளாகி விவாதம்
கோவை திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் போது ஜிஎஸ்டி குறித்து கமல் ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமல் ஹாசன் பிரச்சாரம்
கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் இரண்டாவது சுதந்திர போர். ஜூன் 4-ம் திகதி மக்கள் கொண்டாட வேண்டும் என்றால் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
வட மாநிலங்களில் இருந்து கோயம்புத்தூர் வரும் தொழிலாளர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களுடைய மாநிலத்தின் உண்மை நிலை தெரியும்.
நாம் உட்கொள்ளும் பிஸ்கெட் உணவு பொருளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், தங்க பிஸ்கெட்டுக்கு வெறும் 3 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது" என்று பேசியுள்ளார்.
விமர்சனம்
கமல் ஹாசன் பேசிய ஜிஎஸ்டி குறித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பாஜக ஆதரவாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், "100கிராம் பிஸ்கட் 10 ரூபா. அதுல 18% 1.8பைசா 100 கிராம் கோல்டு பிஸ்கட் 7,61,000 ரூபா. அதுல 3% 22,830 ரூபா.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத காரணத்தால் தான் அறிவாலயத்தில் பிஸ்கட் எதிர்பார்க்கும் நிலை" என்று விமர்சித்துள்ளார்.
இன்னொரு பயனர் ஒருவர், "தங்க பிஸ்கட் எந்த எழையும் வாங்கி சேமிப்பது இல்லை. தங்க பிஸ்கெட்டுக்கு 5%க்கு பதில் 12% வட்டி போட்டா கூட, ஏழைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு வட்டி போட தேவையிருக்காது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |