தீபாவளி திருநாள்: 18 லட்சம் பேர் பயணம்
தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டும் 7.94 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தீபாவளி திருநாள் இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சொந்தபந்தங்களுடன் இந்நன்னாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 7.94 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கடந்த 16 முதல் 19ம் திகதி வரை இயக்கப்பட்ட 15429 பேருந்துகளில் 794,990 பேர் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் ரயில்கள், பேருந்துகள், கார்கள் மூலம் 18 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர், இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.