பிரான்சில் பொலிசாரை காருக்குள் வைத்த எரித்த சம்பவம்! கொடுக்கப்பட்ட தண்டனை இது தான்
பிரான்சில் பொலிஸ் அதிகாரிகளை காருக்குள் வைத்து எரித்த சம்பவத்தில் ஐந்து பேருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Viry-Châtillon (Essonne) நகரில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கார் ஒன்றினுள் இருந்த நான்கு பொலிசாரை ஐந்து பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியது.
இதனால், அந்த நான்கு பொலிசாரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த போது, இந்த மோசமான செயலில் ஈடுபட்ட அவர்களுக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து இறுதியாக ஐந்து பேருக்கும் 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனைக்குள்ளான ஐந்து பேரும், 21 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது.