மோட்டார் சைக்கிளை அணுக முயன்ற பொலிஸார்: பிரித்தானியாவில் 18 வயது இளைஞர் பலி
18 years old Rider dead after Kent police attempted to approach பிரித்தானியாவில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
18 வயது இளைஞர் பலி
பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் உள்ள ஷீர்னஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அணுக முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஷெப்பி லீஷர் சென்டர் அருகே பீச் ஸ்ட்ரீட் மற்றும் ராயல் ரோடு பகுதியில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை காவல் அதிகாரி கால்நடையாக சென்று அணுக முயன்றுள்ளார்.
அப்போது காவலர் நெருங்கி வருவதால் பதறிய அந்த இளைஞர் வாகனத்தை சிறிய சந்து பகுதிக்குள் வேகமாக இயக்க முயற்சித்துள்ளார்.

இதையடுத்து ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 18 வயது இளைஞருடன் பயணித்த 16 வயது சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் அணுகலைத் தொடர்ந்து இந்த விபத்து நடைபெற்றுள்ளதால்,காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகத்தின்(IOPC) விசாரணைக்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்திற்கான முழுமையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.