பிரித்தானியாவில் துரத்தலில் இறங்கிய பொலிஸார்! சுவரில் கார் மோதியதில் 18 வயது இளைஞர் மரணம்
பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயரில் பொலிஸார் துரத்தலின் போது 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் துரத்தலில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயரில் பொலிஸ் துரத்தல் ஒன்றின் போது, 18 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் திங்களன்று பிற்பகல் ஷெஃபீல்ட்(Sheffield) நகர மையத்திற்கு தெற்கே உள்ள ஹைட் பார்க் வாக்(Hyde Park Walk) அருகே நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ள தகவலில், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற ஃபோர்டு ஃபீஸ்டா கார்(Black Ford Fiesta) ஒன்று பொலிஸாரின் வருகையை கண்டு தப்பிக்க முயற்சித்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
பிரித்தானிய ராணுவத்தில் 13,522 பேர் மருத்துவ ரீதியாக பணிக்கு தகுதியற்றவர்கள்! வெளியான அதிர்ச்சி அறிக்கை
இதையடுத்து திருடப்பட்ட காரை பிடிக்க குறுகிய துரத்தல் நடந்தது, இதில் ஃபீஸ்டா கார் சுவர் ஒன்றில் மோதி பலத்த சேதமடைந்தது.
அத்துடன் இதில் 18 வயது இளைஞர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், இருப்பினும் காயங்களின் தீவிரத்தன்மையால் இளைஞர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தெற்கு யார்க்ஷயர் பொலிஸார் இறந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், விசாரணையில் உதவும் எந்தவொரு தகவல், டாஷ் கேம் காட்சிகள் அல்லது சிசிடிவி பதிவுகள் உள்ளிட்டவை இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுயாதீன விசாரணை
பொலிஸார் துரத்தலின் போது 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து சுயாதீன போலீஸ் நடத்தை அலுவலகத்திற்கு (IOPC) தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன போலீஸ் நடத்தை அலுவலகம் சம்பவங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான விசாரணையை முன்னெடுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |