பயணிகள் கப்பல் மீது மோதிய சரக்குக் கப்பல்: அனைவரும் உயிர் தப்பிய அதிசயம்
180 rescued after cruise ship collides with tanker in Mississippi river: மிசிசிப்பி நதியில் நின்றுகொண்டிருந்த பயணிகள் கப்பல் மீது சரக்குக் கப்பல் ஒன்று மோதிய விபத்தில் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில், பயணிகள் கப்பல் மீது சரக்குக் கப்பல் ஒன்று மோதிய நிலையில், அனைவருமே உயிருடன் மீட்கப்பட்டுவிட்ட அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பயணிகள் கப்பல் மீது மோதிய சரக்குக் கப்பல்
நேற்று மதியம் 12.30 மணியளவில், அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் நகரில், மிசிசிப்பி நதியில், அமெரிக்கன் ஹெரிடேஜ் என்னும் பயணிகள் கப்பல் ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, நின்றுகொண்டிருந்த பயணிகள் கப்பல் மீது மோதியுள்ளது.

சரக்குக் கப்பல் மோதியதில் அமெரிக்கன் ஹெரிடேஜ் கப்பல் மெல்ல சாய, கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதைத்தொடர்ந்து அந்தக் கப்பல் அப்படியே சரிந்துவிட்டது.

ஐந்து தளங்கள் கொண்ட அமெரிக்கன் ஹெரிடேஜ் கப்பலில் 129 பயணிகள் உட்பட மொத்தம் 180 பேர் வரை இருந்ததாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வான்வெளி மீண்டும் திறப்பு: இயல்பு நிலை உடனே திரும்பாது! போக்குவரத்துத் துறை செயலாளர் அறிவிப்பு
அனைவரும் உயிர் தப்பிய அதிசயம்
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், உடனடியாக தண்ணீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளனர்.

அவர்களில் 32 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவிலை என்று கூறியுள்ளார் நியூ ஓர்லன்ஸ் மேயரான ஹெலனா மொரெனொ.
அத்துடன், கப்பலிலிருந்த 180 பேரும் வரை பத்திரமாக மீட்கப்பட்டதால், இது ஒரு அற்புதம் என்கிறார் அவர்.
அமெரிக்கன் ஹெரிடேஜ் கப்பலே ஒரு பிரம்மாண்ட கப்பல். அது 81 மீற்றர் நீளம் கொண்டது. அதன் மீது மோதிய சரக்குக் கப்பலோ அதைவிட பிரம்மாண்டமானது.

ஆம், தார் சாலை மற்றும் கூரைகள் அமைக்க பயன்படும் ரசாயனங்களைக் கொண்டு செல்லக்கூடிய அந்த சரக்குக் கப்பல் 160 மீற்றர் நீளம் கொண்டது!
Rescue operations are underway after a tanker collided with a docked riverboat on the Mississippi River near the Port of New Orleans, officials said. Read more: https://t.co/qOlUaZhh5k https://t.co/DEwkGSBZoo
— ABC News (@ABC) November 13, 2026