1880களில் பயன்படுத்தப்பட்ட லெவிஸ் ஜீன்ஸ் ரூ. 2.7 கோடிக்கு ஏலம்! சுவாரஸ்ய தகவல்
அமெரிக்காவில் 1880-களின் பயன்படுதிகப்பட்ட இரண்டு லெவிஸ் ஜீன்ஸ் பேண்ட்கள் ஏலத்தில் 76,000 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது.
1880-களில் பயன்படுத்திய, அதாவது 140 வருடங்கள் பழமையான ஒரு ஜோடி ஜீன்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க மேற்குப் பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த ஜீன்ஸ் பேண்டுகள் இப்போது, வடக்கு நியூ மெக்ஸிகோவில் நடந்த ஏலத்தில் 76,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டது (இலங்கை ரூ. 2.7 கோடி). இது இதுவரை விற்கப்பட்ட விலையுயர்ந்த ஜோடிகளில் ஒன்றாகும்.
goldenstatevtg/Instagram
இந்த Levi Strauss ஜீன்ஸை, சான் டியாகோவைச் சேர்ந்த விண்டேஜ் ஆடை வியாபாரியான 23 வயதான Kyle Haupert நபர் ஏலத்தில் வென்று வாங்கினார்.
லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட விண்டேஜ் ஆடை நிறுவனமான டெனிம் டாக்டர்ஸின் உரிமையாளரான ஜிப் ஸ்டீவன்சனுடன் விண்டேஜ் ஜீன்ஸை ஹாபர்ட் வாங்கினார்.
உண்மையில், ஜீன்ஸ் 87,400 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது. Kyle 90 சதவீதத்தை செலுத்தினார், மீதமுள்ள 10 சதவீதத்தை விண்டேஜ் சந்தையை நடத்தும் மற்றொரு நபரான Zip Stevenson செலுத்தினார்.
PHOTO: MATTHEW SHEFFIELD
இருவரும் இப்போது ஜீன்ஸை விற்கத் திட்டமிட்டுள்ளனர், குறைந்தது 150,000 அமெரிக்க டொலருக்கு விலை நிர்ணயித்துள்ளனர்.
ஜீன்ஸ் முதன்முதலில் பல ஆண்டுகளுக்கு முன்பு டெனிம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஹாரிஸ் என்பவரால் அமெரிக்க மேற்கில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கால்சட்டை இரண்டு நூற்றாண்டுகள் பழமையானது என்றாலும், சில துளைகள் மற்றும் பிளவுகளைத் தவிர, அவை அப்படியே இருந்தன. அமெரிக்காவின் சிக்கலான வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், பின் பாக்கெட்டில் "மேட் பை ஒயிட் லேபர்" என்ற டேக்லைன் உள்ளது.
goldenstatevtg/Instagram