இங்கிலாந்தில் பற்றியெரியும் காட்டுத்தீ: 19 பேர் மருத்துவமனைகளில் அனுமதி
இங்கிலாந்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், 19 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
பல இடங்களில் காட்டுத்தீ

Birmingham, Staffordshire மற்றும் Worcestershire ஆகிய பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 தீயணைப்பு இயந்திரங்களுடன் தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

பல வீடுகள் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், மூன்று முதியோர் இல்லங்களில் இருந்தவர்கள் உட்பட சுமார் 300 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
சில அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை மட்டுமே எடுக்க முடிந்ததாக கூற, சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை மட்டுமே தங்களுடன் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

சுமார் 54 பேருக்கு அவசர உதவிக்குழுவினர் சிகிச்சையளித்த நிலையில், மூன்று தீயணைப்பு வீரர்கள், ஆறு பொதுமக்கள், ஒரு குழந்தை உட்பட 19 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பெரும்பாலும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |