ஜேர்மன் தேவாலயத்தில் திடீரென நிலைகுலைந்து சரிந்த மக்கள்: 19 பேர் மருத்துவமனையில்
19 rushed to hospital 'with carbon monoxide poisoning' during church service in Germany: ஜேர்மன் தேவாலயம் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு நச்சு பரவல் காரணமாக 19 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Allgäu பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று ஆராதனை நடந்துகொண்டிருந்திருக்கிறது.
காலை 10.50 மணியளவில், தேவாலயத்தில் அமர்ந்திருந்த மக்கள் பலர் திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளனர்.
19 பேர் மருத்துவமனையில்...
சிறிது நேரத்தில் தீயணைப்புப் படையினர், மருத்துவ உதவிக்குழுக்கள் மற்றும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர்களில் 19 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட மற்றவர்களுக்கு அங்கேயே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் இரண்டு சிறுபிள்ளைகளும் அடங்குவர்.
இந்நிலையில், தேவாலயத்தில் சமீபத்தில் பொருத்தப்பட்ட ஹீற்றர் ஒன்றே பிரச்சினைக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
காலை 6.00 மணியளவில், ஒருவர் தேவாயத்தை வெப்பப்படுத்துவதற்காக அந்த ஹீற்றரை ஆன் செய்துள்ளார்.
தேவாலயத்துக்குள் கார்பன் மோனாக்சைடு ஒரு அளவுக்கு மேல் அதிகரித்தால், அந்த ஹீற்றர் தானாகவே அணையவேண்டும்.
ஆனால், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த அமைப்பு வேலை செய்யவில்லை.
ஆக, அந்த கார்பன் மோனாக்சைடு தேவாலயத்தில் அளவுக்கு மேல் பரவியதாலேயே அங்கிருந்த மக்கள் நிலைகுலைந்து சரிந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.