காதல் கணவர் கூறிய வார்த்தை..புதுமணப்பெண் தற்கொலை..திருமணமான 3 மாதங்களில் சோகம்
தமிழக மாவட்டம் நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
திருநெல்வேலி மாவட்டம் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரும் அமுதா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.
பின் கடந்த சூன் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கணவனும், மனைவியும் தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமுதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் சரவணகுமார் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதால் அமுதா இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அமுதா எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அமுதா தற்கொலை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Representational picture
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |