திருமண வரவேற்பில் நடனமாடிய 21 வயது இளைஞர் அகால மரணம்
சென்னையில் நண்பரின் திருமண வரவேற்பில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கி விழுந்து மரணம்
சமீப காலமாக இந்தியாவில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் நடனமாடும்போது மயங்கி விழுந்து இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக, பெரும்பாலும் இளைஞர்களே அதிகம் இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர். அதே போன்ற சம்பவம் தற்போது சென்னையில் நடந்துள்ளது.
மணி பிரசாந்த் என்ற 21 வயது இளைஞர் தனது நண்பரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார்.
நடனமாடிய இளைஞர் உயிரிழப்பு
சிட்லப்பாக்கம் அருகே இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் பாடல்கள் ஒலிக்கும் போது மணி பிரசாந்த் நடனமாடியுள்ளார். அப்போது அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த நொளம்பூர் பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.
Express Photo